ரணில் கொடுத்த அழுத்தம் அம்பலப்படுத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்
தன்னால் நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கட் குழுவை நீக்குமாறு அழுத்தம் கொடுத்த அதிபர் ரணில், அவ்வாறு செய்யாவிடில், விளையாட்டுச் சட்டத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வேன் என தன்னிடம் தெரிவித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றத்தில் இன்று (7) தெரிவித்தார்.
அமைச்சரவை கூட்டத்தின் பின்னரே ரணில் மேற்கண்ட அழுத்தத்தை பிரயோகித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க,
அமைச்சரவை கூட்டத்திற்கு பின் அழைத்த ரணில்
“அமைச்சரவைக்குள் என்ன நடந்தது என்பதை என்னால் கூற முடியாது, நான் கூட்டுப் பொறுப்பை பாதுகாக்க விரும்புகிறேன்.
ஆனால் அதிபர் அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் என்னை அலுவலகத்திற்கு அழைத்து நியமிக்கப்பட்ட குழுவை நீக்குமாறு கூறினார். இல்லையேல் விளையாட்டு சட்டத்தை தன் கீழ் கொண்டு வருவேன் என்றார்.
அரச ஊழியர்களுக்கு இருபதாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்: ரணிலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஒருபோதும் முடியாது
விளையாட்டு சட்டம் அல்ல, என்னை நீக்கிவிட்டு உங்கள் விருப்பப்படி முடிவெடுங்கள் என அதிபரிடம் கூறினேன். நியமிக்கப்பட்ட குழுவை நீக்கவே முடியாது என்று கூறினேன். இவர்கள் செய்துள்ள ஊழல். திருடர்களின் கூட்டம். ஆழம் தெரியாது." என தெரிவித்தார்.
இதேவேளை விளையாட்டு அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலின் செயற்பாட்டை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவிற்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு 14 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும்.