ஆளும் கட்சிக்குப் பிறந்துள்ள ஞானம்! எதிர்க்கட்சிகளுடன் பேச விடுத்துள்ள அழைப்பு
எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள சர்வகட்சி மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணவே இந்த சர்வகட்சி மாநாடு கூட்டப்பட வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடரந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
எமது நாட்டில் நிலவும் பிரச்சினைகளை அரசியல் கோணத்தில் பார்க்க வேண்டாம். உண்மையிலேயே எழுந்துள்ள பிரச்சினைகள் அதற்கான காரணிகளைக் கண்டுபிடித்து அதனை நிவர்த்தி செய்யக்கூடிய வழிமுறைகள் பற்றி ஆராயப்பட வேண்டும்.
அரசியல் ரீதியற்ற தொழில்நுட்ப ரீதியில் இந்தப் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவது பொருத்தமானதாக அமையும்.
எதிர்க்கட்சியினருக்கு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியுமாயின் சர்வகட்சி மாநாட்டில் அதனை முன்வைக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.