அனைத்து கட்சி தலைவர்களுக்கும் விசேட அறிவிப்பு
13th amendment
Ranil Wickremesinghe
Sri Lanka
By Beulah
அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
இவ்வகையில், அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜூலை 26 ஆம் திகதி நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளையும் யோசனைகளையும் ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
அதிபரின் பணிப்புரை

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 26 அன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கூட்டப்பட்டிருந்த சர்வகட்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களுக்கு அமைவாக அதிபரின் பணிப்புரையின் பேரில் மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி