இலங்கையில் பிரபல சுற்றுலா தள அபிவிருத்திக்கு 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
Sri Lanka Tourism
Sri Lanka
Tourism
By Shalini Balachandran
பின்னவல கித்துல்கல சுற்றுலா வலயத்தை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட தீர்மானத்தில் பின்னவல கித்துல்கல சுற்றுலா வலயத்தின் அபிவிருத்திக்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சுக்கு 750 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
மேம்பாட்டுத் திட்டங்கள்
இதனடிப்படையில், அடையாளம் காணப்பட்ட பல உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்துவதற்காக தேசிய திட்டமிடல் துறையால் நியமிக்கப்பட்டுள்ளன.
இதன்படி பின்னவல கித்துல்கல சுற்றுலா வலய அபிவிருத்தித் திட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்