அமெரிக்காவில் கஞ்சா உபயோகிப்பது குற்றமல்ல: ஜோ பைடன்
கஞ்சாவை குறைந்த ஆபத்து கொண்ட போதைப்பொருளென மறுவகைப்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) தலைமையிலான அரசு முன்மொழிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் (America) ஹெரோயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இவைகள் அனைத்தும் அதிக ஆபத்து கொண்ட போதைப்பொருள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஹெரோயின் போன்ற போதைப்பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் கடத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு அதிகமான தண்டனை வழங்கப்பட்டாலும் கஞ்சா பயன்படுத்துவது தொடர்பான கைது நடவடிக்கை குறைந்த அளவே காணப்படுகின்றன.
அதிகமான தண்டனை
இந்த நிலையில், கஞ்சாவை குறைந்த ஆபத்து கொண்ட போதைப்பாருள் என மறுவகைப்படுத்த ஜோ பைடன் தலைமையிலான அரசு முன்மொழிந்துள்ளதுடன் அமெரிக்காவில் இனிமேல் கஞ்சா பயன்படுத்துவது அதிகாரப்பூர்வாக்கப்படலாமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மேலும் தெரிவிக்கையில், "கஞ்சா பயன்படுத்தியதற்காக யாரும் சிறையில் இருக்கக்கூடாது.
கஞ்சாவை அணுகுவதில் தோல்வியுற்றதால் பல உயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அந்த தவறுகளை சரி செய்வதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |