கூந்தல் பொலிவின்மைக்கு நிரந்தர தீர்வு: இதை செய்தால் போதும் உடனடிபலன்
ஆண் பெண் என அனைவருக்குமே கூந்தல் பிரச்சினை என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது.
எவ்வளவு அடர்த்தியாக இருந்தாலும், கூந்தல் பொலிவில்லாமல் ஆரோக்கியமற்று இருக்கும் போது, அது பெரும் பிரச்சினையாகவே காணப்படுகின்றது.
எனவே அதற்காக பயன்படுத்தும், செம்போக்கள் கண்டிஷனர்கள், இரசாயனம் கலந்த எண்ணெய்கள் போன்றவற்றால் மேலும் கூந்தல் பாதிக்கப்படலாம்.
கூந்தல் பொலிவின்மை
எனவே, இயற்கையான முறையில், வீட்டிலுள்ள பொருளை வைத்து இந்த பிரச்சினையை தீர்க்கலாம்.
அனைவரது வீட்டிலும் இருக்க கூடிய கற்றாழை தான் இதற்கு சிறந்த தீர்வாக அமைகின்றது.
இயற்கையாகவே ஈரழிப்பை கொண்ட கற்றாழையானது கூந்தல் பொலிவின்மைக்கு உடனடி தீர்வு வழங்குகின்றது.
கற்றாழையை பயன்படுத்தும் முறை
கற்றாழையை எவ்வாறு பயன்படுத்தி கூந்தல் பொலிவாக்கலாம் என்பதை பார்க்கலாம். சுத்தமான கற்றாழைகளை எடுத்து, இருக்கும் முட்களையும் தோலையும் சீவ வேண்டும்.
பின்னர், அதிலிருக்கும் ஜெல் போன்ற பதார்த்தத்தை கூந்தலில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். கூந்தலின் அடி உச்சி முதல் நுனி வரை அனைத்துப் பகுதியிலும் கற்றாழையைத் தேய்க்க வேண்டும்.
அரை மணி நேரம் கழித்து கூந்தலை கழித்து கூந்தலை சுத்தமான நீரினால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வந்தால் பட்டு போன்ற அழகான கூந்தலை பெறலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |