மக்களே கவனம் - கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் (Amber) எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை, நாளை (06) அதிகாலை 1.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை
கொழும்பு, கம்பஹா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், இரத்தினபுரி, அனுராதபுரம், பதுளை, மன்னார், மாத்தளை, மொனராகலை, நுவரெலியா மற்றும் வவுனியா உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடுமையான மின்னல் தாக்கத்தினால் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மின்னல் தாக்கத்தினால் மின்சார மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் சேதமடைவதுடன், மின்சாரம், தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து சேவைகளிலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மக்களே கவனம்
இடியுடன் கூடிய மழை நெருங்கும் சந்தர்ப்பங்களில் வெளிப்புற விளையாட்டுகள், கட்டுமானப் பணிகள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பான கட்டடங்கள் அல்லது மூடப்பட்ட வாகனங்களில் தஞ்சமடையுமாறும், தனிமையான மரங்கள், திறந்த கூடாரங்கள், கடற்கரைகள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், இடியுடன் கூடிய மழையின் போது மின்சார உபகரணங்கள் மற்றும் கம்பி இணைப்புகளைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |