அம்பிட்டிய தேரர் அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின்படி கைதாக வேண்டும் : மனோ கணேசன்
Batticaloa
Mano Ganeshan
By Beulah
நாட்டில் அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் (ICCPR) சட்டத்தின்படி அம்பிட்டிய தேரர், கைது செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்ன தேரோவின் இனவாத கூச்சல் மற்றும் கேவலமான நடத்தை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
இனவாத கருத்துக்கள்
“மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மீண்டும் ஒருமுறை இனவாதத்தை கக்கி இருக்கின்றார்.
நாட்டிலுள்ள பௌத்த மகாநாயக்கர்களும் இதனை கவனத்தில் எடுக்க வேண்டும்.
இனி இவர் இனவாதம் கக்க கூடாது.
அதிபர் ரணில் வழமைப்போல் இதையும் கடந்து போக கூடாது.
அத்துடன், நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பான அமைச்சரும் இதனை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும்.” என்றார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்