அமெரிக்காவின் பிரபலமான நடன அரங்கில் இடம்பெற்ற கொடூர கொலை!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரு பிரபலமான நடன அரங்கில் 11 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர் இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து தாக்குதலை நடத்திய சந்தேகநபரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிற்கு தெற்கே சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்கரை நகரமான ஹாஃப் மூன் பேவில் இரண்டு தனித்தனி இடங்களில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
மாநிலம் முழுவதும் துக்க தினம்
இந்த தாக்குதல் நடத்திய சந்தேகநபர் 67 வயதான Zhao Chunli என்ற உள்ளூர்வாசி என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஆசிய வம்சாவளியினர் பெரும்பான்மையாக வசிக்கும் Monterey Park நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மாநிலம் முழுவதும் துக்கம் கடைப்பிடிக்கும் நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதனையடுத்து, காளான் பண்ணை ஒன்றில் நால்வர் சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில், அதற்கு அருகில் உள்ள பாரஊர்தி வணிக நிலையமொன்றில் இருந்து மேலும் மூன்று பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைது
இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உள்ளூர் காவல் நிலையத்தில் சரண் அடைய சென்ற போது தாக்குதல்தாரியை கைதுசெய்துள்ளதாக San Mateo County Sheriff Christina Corpus தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்திய தானியங்கி துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுவருவதுடன், தாக்குதல்தாரி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட எட்டாவது நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் Christina Corpus மேலும் தெரிவித்துள்ளார்.

