திணறிய இலங்கைக்கு மகிழ்ச்சியளித்த அமெரிக்கா! வருகிறது டொலர்கள் - வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு
இலங்கையின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த 20 மில்லியன் டொலரை உதவியாக வழங்கவுள்ளதாக அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடன் அறிவித்தார்.
இன்று நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே ஜோ பைடன் இதனைத் தெரிவித்தார்.
800,000 க்கும் மேற்பட்ட இலங்கை குழந்தைகளுக்கு உணவளிக்கும் மற்றும் 27,000 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு உணவு வழங்கும் ஊட்டச்சத்து திட்டத்திற்கு ஆதரவளிப்பதை இந்த நிதியுதவி நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்கத் தூதுவரின் கருத்து
இதேவேளை, இலங்கைக்கு 20 மில்லியன் டொலர் கூடுதல் உதவி வழங்குவதாக அரச தலைவர் ஜோ பைடன் அறிவித்திருப்பது, உணவுப் பாதுகாப்பு, பொது சுகாதாரம் மற்றும் அனைத்து இலங்கை மக்களின் பொருளாதார நல்வாழ்வுக்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை நிரூபிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
Today, @POTUS announced $20 million in additional assistance to SL. This aid will feed Sri Lankan children, combat food insecurity and demonstrates our enduring commitment to the health & well-being of the Sri Lankan people.https://t.co/wYJmawQGGE
— Ambassador Julie Chung (@USAmbSL) June 28, 2022