அமெரிக்காவின் புதிய போர் - திணறப்போகும் ஐரோப்பா!
அரசியல் ஆதரவு, ஆயுதங்கள் வழங்குவது, மேற்கத்திய ஆலோசகர்களை அனுப்புவது என்று அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவுப் போக்கு உக்ரைன் நாட்டு ஆட்சியாளர்களை ஒரு போர் சாகசத்தை நோக்கிப் பிடித்துத் தள்ளுகிறது.
அமெரிக்க போர்த்தந்திர நிபுணர்கள், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளை மட்டுமின்றி, ஐரோப்பிய கண்டத்தின் வீழ்ச்சியையும் அவர்களின் இலக்காகக் குறி வைத்துள்ளனர்.
உக்ரைன் சூழலைப் பயன்படுத்தி, ரஷ்யாவின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முயன்று வருகிறது.
அதேசமயம், அமெரிக்காவின் முக்கிய பொருளாதாரப் போட்டியாளரான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இருந்து வருவதுடன், அமெரிக்காவிற்கு இந்த யுத்த சூழலானது ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கப்போகிறது.
புதிய போர்
ரஷ்யாவுடனான அமெரிக்காவின் வர்த்தகம் மிகக் குறைவாகவே உள்ளது.
ஆனால், ரஷ்ய நாட்டுடன் ஐரோப்பிய கண்டம் மிகவும் பரந்துபட்ட, இலாபகரமான வணிகம் மற்றும் பொருளாதார உறவைக் கொண்டுள்ளது.
எனவேதான், ரஷ்யாவுடனான ஒரு இராணுவ மோதல் மூலமாக, ஐரோப்பிய நாடுகளையும் பொருளாதாரத் தடைகளின் ஊடாக மேலும் பாதிப்புகளுக்கு உட்படுத்த அமெரிக்கா முயல்கிறது.
இதன் மூலம் அமெரிக்கா தன்னை பலப்படுத்துவதற்கு சாதகமான சூழல் உருவாகும்.
உக்ரைன் நாட்டைப் பாதுகாப்பது அமெரிக்க சர்வ தேசியவாதிகளின் நோக்கமல்ல.
நோக்கம்
நார்டுஸ்ட்ரீம் 2 (NordStream 2) இயற்கை எரிவாயு குழாய் கட்டமைப்பை அழித்தொழித்து, விலையுயர்ந்த திரவமாக்கப்பட்ட எரிவாயுவின் மீதான சார்புத்தன்மையை நிலைநாட்டி, இலாபமீட்டுவதே அமெரிக்காவின் பிரதான் நோக்கங்களில் ஒன்று.
இதுவே உக்ரைன் நாட்டை ஒரு போரை நோக்கி தள்ளுவதற்கு அடிப்படையான காரணமும் ஆகும்.
அமெரிக்க காய்நகர்த்தல்கள்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் நேரடித்தாக்குதல்கள், ஆக்கிரப்புக்கள் பற்றி குறை கூறி, ரஷ்யா மீது பலி கூறும் ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் துள்ளியமான காய் நகர்த்தல்களை பற்றி சிந்திக்கவில்லை.
இதையே ரஷ்யாவும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.
மேற்கு உலக தலைவர்களோ, நிதர்சனமாகக் கண் முன் நிலவும் சூழலைக் புறந்தள்ளுகிறார்கள் எனவும், அவதூறு பரப்புவது, தகவல்களைத் திரித்துக் கூறுவது என்று ரஷ்யாவுக்கு எதிராகவே பலிகளை சுமத்துகிறார்கள் எனவும் ரஷ்யா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
ரஷ்யா மேலே தெரிவிக்கும் விடயங்களில் சில உண்மைத் தன்மையும் உள்ளது.
ஐரோப்பிய வீழ்ச்சி
சோவியத் ஒன்றியம் சிதைந்த பின்னர் தோன்றிய நாடுகளில் ரஷ்ய நலன்கள் அடங்கியிருப்பது உண்மை ஆகும்.
அமைதி, நல்லுறவு, குடிமக்களுக்கான கண்ணியமான வாழ்க்கை, பொருளாதார மேம்பாடு மற்றும் பண்பாட்டு ரீதியிலான ஒத்துழைப்பு என்று சொல்லி ரஷ்ய நலன்கள் உக்ரைன் நாட்டுச் சூழலிலும் அடங்கியுள்ளது.
ரஷ்யாவின் பக்கம் இருந்து நோக்கினால், மேற்கு உலக நாடுகள் மிகவும் பிற்போக்கான சக்திகளுக்காக உக்ரைனில் ஆதரவு திரட்டுகிறது.
ஐரோப்பிய நாடுகள் தமது சரிவிற்கு தாமே கேடயமாக பயன்படுத்தப்படுவதை வெகு விரைவில் உணரும் என்பதை ரஷ்யா ஆணித்தனமாக கூறுகிறது.
ரஷ்யாவின் வீழ்ச்சியை விட ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சியையே அமெரிக்கா எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.