உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா திட்டம்!
உக்ரைன் (Ukraine) - ரஷ்யா (Russia) போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான திட்டத்தில் தான் பணியாற்றி வருவதாக அமெரிக்கா (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) சிறப்புத் தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (01.02.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் “ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, உக்ரைன் - ரஷ்யா போரை ஒரே நாளில் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என ஜனாதிபதி ட்ரம்ப் கூறியிருந்தார்.
அத்தோடு உக்ரைனில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த அமெரிக்கா விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட உக்ரைன் தயாராக இருந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்தப்படலாம் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |