அமெரிக்காவில் வரலாறு காணாத கனமழை: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
அமெரிக்காவில் (United States) கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மத்திய கெர் கவுண்டியில் பலத்த மழை கொட்டி தீர்க்கின்றது.
இதனால் தென்-மத்திய டெக்சாசில் உள்ள குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஊருக்குள் தண்ணீர்
சில மாதங்கள் பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களில் பெய்ததால் இவ்வாறு வெள்ளப்பொருக்கு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் ஊருக்குள் புகுந்த நிலையில், இந்த திடீர் வெள்ளத்தில் வீடுகள் மற்றும் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன.
வீடுகளின் மேற்கூரை
பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் இதனால் பலர் வீடுகளின் மேற்கூரையில் தஞ்சம் அடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 28 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 41 பேர் மாயமானதாக கூறப்படுவதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை நூறை கடக்கும் என அஞ்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
