இலங்கை வரவுள்ள அமெரிக்க திறைசேரியின் முக்கியஸ்தர்! வெளியான தகவல்
அமெரிக்க (America) திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் (Robert Kaproth) அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் (Julie Chung), இதனை தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
முக்கிய சந்திப்புக்கள்
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ரொபர்ட், அரச அதிகாரிகள் மற்றும் நிதித்துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
ரொபர்ட் கப்ரோத்தின் விஜயம் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான நட்புறவையும் ஆதரவையும் எடுத்துக் காட்டுகின்றது.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பொருளாதாரம், நிதித் துறைகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் ஆழமான சீர்திருத்தங்கள் இன்றியமையாததாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
We look forward to welcoming @USTreasury's Deputy Assistant Secretary Robert Kaproth back to Sri Lanka next week to meet with government officials, think tanks, and financial sector leaders. DAS Kaproth’s visit underscores U.S. commitment to supporting Sri Lanka during this…
— Ambassador Julie Chung (@USAmbSL) June 28, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |