பிரான்ஸை போல பற்றி எரியப்போகும் அமெரிக்கா : ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை

Donald Trump United States of America Election France Crisis
By Jaso Oct 21, 2026 06:13 PM GMT
Report

அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மிக முக்கிய இடைத்தேர்தலில் தனது தலைமையிலான குடியரசுக் கட்சி ஆட்சிக்கு வரவில்லை என்றால் பிரான்ஸ் போல் அமெரிக்காவும் தீப்பிடித்து எரியும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கன்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற பிரமாண்ட தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில், கலந்துகொண்டு ஆவேசமாக உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரான்ஸில் உருவெடுத்துள்ள வன்முறை

"ஐரோப்பிய நாடான பிரான்சில் தற்போது கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் தவறான குடியேற்றக் கொள்கைகளால் மக்கள், இளைஞர்கள் வீதிக்கு வந்து போராடி வருகின்றனர். அங்கு நடக்கும் வன்முறை கலவரங்களையும், தீப்பற்றி எரியும் கட்டிடங்களையும் நீங்கள் பார்க்கிறீர்கள். அங்கு நிலைமை மிகவும் மோசமானதாக மாறியுள்ளது" என்றார்.

பிரான்ஸை போல பற்றி எரியப்போகும் அமெரிக்கா : ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை | America Will Burn Donald Trump

"இந்த இடைத்தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி தோற்று எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால் அமெரிக்காவின் நிலையும் பிரான்ஸ் நாட்டைப் போல் மோசமாக மாறிவிடும். அமெரிக்காவும் தீப்பற்றி எரியும் சூழ்நிலை உருவாகும்.

ஜனநாயக கட்சியினர் தங்களது வாக்கு வங்கி அரசியலுக்காக எல்லையற்ற குடியேற்றங்களை ஆதரிக்கிறார்கள். இது நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.

போராட்டங்களால் பற்றி எரியும் பிரான்ஸ்..! தடுமாறும் அரசு - களமிறங்கும் இராணுவம்

போராட்டங்களால் பற்றி எரியும் பிரான்ஸ்..! தடுமாறும் அரசு - களமிறங்கும் இராணுவம்

 அமெரிக்காவை பேரழிவிலிருந்து காப்பாற்ற குடியரசுக்கட்சிக்கு வாக்கு 

நாட்டைப் பேரழிவில் இருந்து காப்பாற்றவும், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் பொதுமக்கள் அனைவரும் குடியரசுக் கட்சிக்குப் பெருவாரியாக வாக்களிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

பிரான்ஸை போல பற்றி எரியப்போகும் அமெரிக்கா : ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை | America Will Burn Donald Trump

ட்ரம்பின் இந்த அதிரடிப் பேச்சுக்கு எதிர்க்கட்சியான, ஜனநாயக கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ட்ரம்ப் தோல்வி பயத்தில் வாக்காளர்களை அச்சுறுத்தி, வதந்திகளைப் பரப்புவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உள்நாட்டு பணவீக்கம் மற்றும் ஈரான் உட னான போர் பதற்றம் ஆகியவற்றுக்கு மத்தியில், ட்ரம்ப் ஆற்றிய இந்த ஆவேசப் பேச்சு உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

பிரித்தானியாவில் ஈரானின் சதித்திட்டம் முறியடிப்பு: அமெரிக்க விமானப் படைத்தளத்தில் இருவர் கைது

பிரித்தானியாவில் ஈரானின் சதித்திட்டம் முறியடிப்பு: அமெரிக்க விமானப் படைத்தளத்தில் இருவர் கைது

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

            

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark, London, United Kingdom

16 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024