திடீரென தீப்பிடித்து எரிந்த அமரிக்க விமானம்...! இறக்கைகளில் பயணிகள் - வைரலாகும் காணொளி
அமெரிக்கன் எயார்லைன்ஸ் (American Airlines ) விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விமானம் தீப்பிடித்து எரிந்ததையடுத்து பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
டென்வெர் சர்வதேச விமான நிலையத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.
விமானத்தில் இருந்து கரும்புகை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விமான நிலையத்தின் கேட் சி38 பகுதியில் நிறுத்தப்பட்ட விமானத்தில் இருந்து முதலில் கரும்புகை வெளியேறியது.
அதன்பிறகு தீப்பிடிக்க தொடங்கியது. விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து பயணிகள் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
மேலும், விமான நிலையத்தில் இருந்த தீயனைப்பு வீரர்கள் துரிதமாக செயற்பட்டு விமானத்தில் தீயை கட்டுப்படுத்தினர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்கன் எயார்லைன்ஸ்-க்கு சொந்தமான விமானம் 1006 பாதை மாற்றப்பட்டு டென்வெர் விமான நிலையத்தின் வேறொரு ஓடுபாதையில் தரையிறக்கப்பட்டதாக ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 6 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்