கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய அமெரிக்க பிரஜை கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமெரிக்க பிரஜை ஒருவர் சிறிலங்கா விமானப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (28) இரவு இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த அமெரிக்க பிரஜையிடம் 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கிக்குரிய 10 தோட்டாக்கள் மற்றும் மகசின் ஒன்று இருந்தததே இந்த கைதுக்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது.
வெடிபொருட்கள் வைத்திருந்தமை
விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் உள்ள ஸ்கிரீனிங் இயந்திரம் வழியாகச் சென்றபோது, குறித்த நபரிடம் மேற்படி வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அவர் விமானப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரான அமெரிக்க பிரைஜை, பெண்ணொருவருடன் நேற்றிரவு 8.25 மணிக்கு சென்னை செல்ல விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
மேலதிக விசாரணை
கைதான அவர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், அவருடன் வந்த பெண்ணை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி வழங்கியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.