காசா வான்பரப்பில் அமெரிக்க ட்ரோன்கள்
United States of America
Israel-Hamas War
Gaza
By Jaso
ஹமாஸ் அமைப்பால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள அமெரிக்க இஸ்ரேலியர்களைத் தேடி அமெரிக்க ஆளில்லா விமானங்கள் காசா பகுதியில் சுற்றி வருவதாகக் கூறப்படுகிறது.
அல் ஜசீரா செய்திச் சேவை இதனைத் தெரிவித்துள்ளது.
ஆனால், இதை அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தவில்லை.
தாக்குதல்களுக்கு ஆளில்லா விமானங்கள்
உளவுத் தகவல்களை சேகரிக்க அமெரிக்க இராணுவம் ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதாகவும், தாக்குதல்களுக்கு ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்றும் அல் ஜசீரா செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இஸ்ரேலின் அதிகாரபூர்வ அறிவிப்பு
இதேவேளை ஹமாஸ் அமைப்பால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 339 இராணுவத்தினர் உட்பட 1400 பேர் கொல்லப்பட்டதாகவும் 241 பேர் பயணக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
