அமெரிக்க இராணுவ உலங்கு வானூர்தி ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து - 9 வீரர்கள் பலி!
United States of America
Accident
By Pakirathan
அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் இராணுவ பயிற்சியின் போது 2 இராணுவ பிளக் ஹாக் உலங்கு வானூர்திகள் விபத்தில் சிக்கியுள்ளன.
குறித்த விபத்தில் 9 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு 10 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து
போர்ட் கேம்ப்பெல்லுக்கு மேற்கே இருக்கும் டிரிக் கவுண்டி இராணுவத் தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி 2 பிளாக் ஹாக் மருத்துவ வெளியேற்ற உலங்கு வானூர்திகள் பயிற்சியில் ஈடுபட்டவேளை, குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த 9 வீரர்களின் அடையாளங்களும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி