தேர்தல் தோல்விக்கு காரணம்: ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
அமெரிக்க தேர்தலில் குடியரசுக் கட்சியின் தோல்விக்கு ஈரானில் நடந்த அமெரிக்கப் போரே காரணம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் முன்னதாக வெளியிட்ட X பதிவு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்படி வேன்ஸின் கருத்து தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
வாக்காளர்களிடையே அதிருப்தி
“அதுபற்றி அவர் எப்படி உணர்கிறார் என்பது எனக்குத் தெரியும், அது சரியானதுதான் என்று நான் நினைக்கிறேன்.

ஈரானில் நான் எதையும் வித்தியாசமாகச் செய்திருக்க மாட்டேன். இடைத்தேர்தலின்போது தான் வேட்பாளராக இருந்திருந்தால், குடியரசுக் கட்சி, காங்கிரஸின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்திருக்கும்.
மேலும், ஈரானில் அமெரிக்கா நடத்தும் போர் குறித்து வாக்காளர்களிடையே அதிருப்தி நிலவினாலும், பாதுகாப்புத்துறைச் செயலர் பதவியில் உள்ள பீட் ஹெகஸ்த்தை மாற்றுவது குறித்து தாம் பரிசீலிக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |