ரஷ்ய தாங்கிகளை சிதறடிக்கும் அமெரிக்க ஆயுதம் - முன்னேற பெரும் திண்டாட்டம்(படங்கள்)
உக்ரைன் படையினருக்கு அமெரிக்கா வழங்கிய டாங்கி எதிர்ப்பு ஆயுதத்தால் ரஷ்ய பீரங்கி படைகள் திணறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகவும் எளிதாக சுமந்து செல்லக்கூடிய ‘ஜாவ்லின்’என்ற பீரங்கி எதிர்ப்பு ஆயுதத்தினால் ரஷ்ய படைகளின் பீரங்கிகளை குறிவைத்து உக்ரைனிய படைகள் தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு நடத்தப்படும் தாக்குதலால் இதுவரை 280 ரஷ்ய பீரங்கிகள் அழிக்கப்பட்டதாக, அமெரிக்க சிறப்பு நடவடிக்கை அதிகாரி கூறியதை மேற்கோள் காட்டி பத்திரிகையாளர் ஜாக் மர்பி, தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
ஜாவ்லினை நேரான விமானப் பாதை முறையிலும் சுட்டு, விமானத்தை வீழ்த்த முடியும்.
உக்ரைனில் இப்போது ஜாவ்லின் இருப்பதை ரஷ்யர்கள் அறிந்தவுடன், டான்பாஸில் உள்ள ரஷ்யாவின் டி-72 பீரங்கிகள் பெரிய அளவில் முன்னேறவில்லை. முன்களத்தில் நிறுத்தப்பட்ட பீரங்கிகளும் பின்வாங்கியதாக பத்திரிகையாளர் ஜாக் மர்பி தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.



