உச்சத்தை தொட்டுள்ள அமெரிக்கா இராணுவ ஆயுதங்களின் விற்பனை

Russo-Ukrainian War United States of America Ukraine Poland Russia
By Shadhu Shanker Jan 30, 2024 09:39 AM GMT
Report

கடந்த வருடம் (2023) அண்டை நாடுகளுக்கு அமெரிக்கா விற்பனை செய்துள்ள இராணுவ தளவாடங்களின் மதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2022இல் ரஸ்யா உக்ரைன் போர் ஏற்பட்டதையடுத்து உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் களமிறங்கின.

இந்நிலையில் தீவிரமாக போரிட்டு வரும் உக்ரைனுக்கு அமெரிக்கா பெருமளவில் இராணுவ தளவாடங்கள் மற்றும் உபகரணங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.

காவல்துறையினரை சரமாரியாக தாக்கிய கும்பல்! யாழில் சம்பவம்

காவல்துறையினரை சரமாரியாக தாக்கிய கும்பல்! யாழில் சம்பவம்

ராணுவ தளவாடங்களின் மதிப்பு 

இதற்கமைய, 2023க்கான கணக்கெடுப்பின்படி இதுவரை இல்லாத அளவிற்கு $238 பில்லியன் அமெரிக்க ஆயுதங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை ஆகி உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

உச்சத்தை தொட்டுள்ள அமெரிக்கா இராணுவ ஆயுதங்களின் விற்பனை | Amid Inter National Wars Arms Export Peaks 2023

அமெரிக்காவை மையமாக கொண்ட லாக்ஹீட் மார்டின், ஜெனரல் டைனமிக்ஸ், நார்த்ராப் க்ரம்மேன் உள்ளிட்ட தனியார் ராணுவ தளவாட நிறுவனங்கள் செய்த விற்பனையும் அமெரிக்க அரசு நேரடியாக $81 பில்லியன் விற்பனையும் இதில் அடங்கும்.

அமெரிக்கா அதிகளவில் ராணுவ தளவாடங்களை விற்பனை செய்த நாடுகளில் போலந்து ($29.75 பில்லியன்) முன்னணியில் உள்ளது.

மீண்டும் இந்தியா பக்கம் சாயுமா மாலைதீவு! நெருக்கடியில் முகமது முய்சு

மீண்டும் இந்தியா பக்கம் சாயுமா மாலைதீவு! நெருக்கடியில் முகமது முய்சு

முன்னணியில் உள்ள நாடு

ஜெர்மனி ($8.5 பில்லியன்), பல்கேரியா ($1.5 பில்லியன்), நார்வே ($1 பில்லியன்), செக் குடியரசு ($5.6 பில்லியன்) உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

உச்சத்தை தொட்டுள்ள அமெரிக்கா இராணுவ ஆயுதங்களின் விற்பனை | Amid Inter National Wars Arms Export Peaks 2023

ஐரோப்பிய நாடுகளை தவிர, தென் கொரியா ($5 பில்லியன்), ஆஸ்திரேலியா ($6.3 பில்லியன்), ஜப்பான் ($1 பில்லியன்) ஆகிய நாடுகளும் குறித்த பட்டியலில் உள்ளன.

"பிராந்திய மற்றும் உலக பாதுகாப்பிற்கு நீண்டகால அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ராணுவ பாதுகாப்புக்கான வர்த்தகமும், ஆயுத விற்பனையும் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் முக்கியமான அம்சம்" என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

மரக்கறிகளின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்: அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

மரக்கறிகளின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்: அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

 வளர்ச்சிக்கு முக்கிய காரணம்

ஆயுத விற்பனையில் அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் உள்ள ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவதை நிறுத்திய பல உலக நாடுகள் அமெரிக்காவிடம் வாங்க தொடங்கியதே அரெிக்காவின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என கூறப்படுகின்றது.

உச்சத்தை தொட்டுள்ள அமெரிக்கா இராணுவ ஆயுதங்களின் விற்பனை | Amid Inter National Wars Arms Export Peaks 2023

அமெரிக்க அரசிடம் இருந்து ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் வாங்க விரும்பும் நாடுகள், அமெரிக்காவின் தனியார் இராணுவ தளவாட விற்பனை நிறுவனங்களிடம் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தி பெற்று கொள்ளலாம் அல்லது தங்கள் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அமெரிக்க இராணுவ அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியும் வாங்கலாம்.

ஆனால், இரண்டு வழிமுறைகளுக்கும் அமெரிக்க அரசின் முன் அனுமதி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021