முதலில் எங்களை வெட்டி வீசுங்கள்: அம்பிட்டிய தேரருக்கு பகிரங்க சவால் விடுத்த எம்.பி

Sri Lankan Tamils Tamils Vadivel Suresh Ampitiye Sumanarathana Thero
By Shadhu Shanker Nov 03, 2023 10:26 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டில் ஒரு பெரும்பான்மை இன மதகுரு ஒருவர் தமிழர்களை வெட்டுவேன் என கூறுவதை ஏன் இந்த அரசாங்கம் கைக்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு (புதிய இணைப்பு)

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு (புதிய இணைப்பு)

அம்பிட்டிய தேரர் 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் என அம்பிட்டிய தேரர் கூறியது அவரது உள் மனதில் இருந்து தெரிவித்த கருத்தாகும்.இதனை கேட்டவுடன் எங்களுக்கு ஒரு சந்தேகம் வருகின்றது, இந்த நிலைப்பாடு தான் அனைவரது மனதிலும் இருக்கின்றதா என்று!

முதலில் எங்களை வெட்டி வீசுங்கள்: அம்பிட்டிய தேரருக்கு பகிரங்க சவால் விடுத்த எம்.பி | Ampitiya Sumanarathana Thero Challenge

தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டில் ஒரு பெரும்பான்மை இன மதகுரு ஒருவர் தமிழர்களை வெட்டுவேன் என கூறுவதை ஏன் இந்த அரசாங்கம் கைக்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.

அவருக்கு எதிராக ஏன் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஏன் அம்பிட்டிய தேரர் கைது செய்யப்படவில்லை. சட்டம் அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்.

 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர், சஹ்ரான் என்ற நபர் தொடர்பான விபரங்கள் வெளியான பின்னர் எவ்வளவு மக்கள் கைது செய்யப்பட்டனர்.

வடக்கு - கிழக்கில் யுத்தம் நடைபெற்றபோது ஆலயங்களினுடைய ஐயர்கள், பூசகர்கள் எத்தனைப் பேர் கைது செய்யப்பட்டனர்.

முதலில் எங்களை வெட்டி வீசுங்கள்: அம்பிட்டிய தேரருக்கு பகிரங்க சவால் விடுத்த எம்.பி | Ampitiya Sumanarathana Thero Challenge

அப்படி இருக்கும் சந்தர்ப்பத்தில், இந்த நாட்டில் அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற நிலை இருந்தால் அம்பிட்டிய தேரரும் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.ஒரே நாடு ஒரே சட்டம் என கூறுகின்றார்கள். உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த நாட்டுக்கு இது ஒரு அபகீர்த்தி.

முறைப்பாடு

மேலும், அரசாங்கத்தினுடைய திட்டத்தினை அம்பிட்டிய சுமனரத்ன தேரர் நடைமுறைப்படுத்துகின்றாரோ என்றும் சந்தேகப்படலாம்.ஏனென்றால் அவர் பகிரங்கமாக மற்றுமொரு இனத்தை வெட்டுவேன் என்கின்றார், காவல்துறையினர் வேடிக்கைப் பார்க்கின்றனர்.

அத்தோடு காவல்துறையினரையும் அவர் தாக்குகின்றார். இது தொடர்பில் காவல்துறை மா அதிபருக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு இன்னும் பதில் வழங்கப்படவில்லை.

தேரரின் இந்தக் கருத்துக்களால் ஒட்டுமொத்த தமிழர்களின் மனங்களும் புண்பட்டுள்ளது. அவர் இவ்வாறான கருத்துக்ககளை வெளியிடும் சமயத்திலேயே அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். இன்னுமொரு இனத்தை வெட்டி வீசுவேன் என்று என்னால் கூற முடியுமா?

தமிழர்களின் தாயகத்தில் சீனா..! போர்க்கொடி தூக்கி எதிர்ப்பு!

தமிழர்களின் தாயகத்தில் சீனா..! போர்க்கொடி தூக்கி எதிர்ப்பு!

பகிரங்க அழைப்பு 

அனைவரையும் வெட்டி வீசுவேன் என்று கூறும் அந்த தேரர் கனவு கண்டு கொண்டிருக்கின்றார். நான் அந்த தேரருக்கு பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். நாடாளுமன்ற மைதானத்திற்கு வாருங்கள். அங்கு தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

முதலில் எங்களை வெட்டி வீசுங்கள். எங்களுடைய பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாமல் நாங்கள் நாடாளுமன்ற மைதானத்திற்கு வருகின்றோம். முடிந்தால் முதலில் எங்களை வெட்டி வீழ்த்துங்கள் அதன் பின்னர் எங்கள் சமூகத்தைப் பார்க்கலாம்.

அவர் பௌத்த துறவியாக இருக்கின்றார். இருப்பினும் அவர் பேசும் வார்த்தைகளும் அவரது நடவடிக்கைகளும் அந்த மதத்திற்கு இழுக்கைத் தேடி தருகின்றது. அவர் அணிந்திருக்கும் காவி உடைக்கு இழுக்கைத் தேடித் தருகின்றது“ என தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025