தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு (புதிய இணைப்பு)

SL Protest Hospitals in Sri Lanka Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Nov 03, 2023 07:47 AM GMT
Report

புதிய இணைப்பு  

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

முதலாம் இணைப்பு  

வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பணிப்புறக்கணிப்பானது இன்று(03)காலை 8 மணி முதல் நாளை சனிக்கிழமை (04)காலை 8 மணி வரை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் இடம்பெற மாட்டாது, மற்றும் மகப்பேற்று மருத்துவ சேவைகள், சிறுவர் மருத்துவ சேவைகள், புற்றுநோய் சிகிச்சைகள், சிறுநீரக செயலிழப்புக்கான சிகிச்சைகள் இடம்பெறும்.

தமிழர் பகுதியில் அடாத்தாக குடியேறும் புத்தர்: கிழக்கில் ஆக்கிரமிக்கப்படும் தமிழ் முஸ்லிம் காணிகள்

தமிழர் பகுதியில் அடாத்தாக குடியேறும் புத்தர்: கிழக்கில் ஆக்கிரமிக்கப்படும் தமிழ் முஸ்லிம் காணிகள்

யாழ்ப்பாணம் 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று(3) காலை ஒன்றுகூடிய வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு (புதிய இணைப்பு) | North Province Hospital Straike

திறமையற்ற சுகாதார நிர்வாகிகளே வைத்தியர்களின் தொழில் உரிமைகளில் கை வைக்காதே!, முறையற்ற வரி சம்பள வெட்டு வைத்தியர்களை துரத்தாதே, அடிப்படை மருந்து உபகரணங்களை உறுதிப்படுத்து போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்தியர்கள் தாங்கியிருந்தனர்.

பல மாதங்களாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற இருப்பதையும், அது தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும், அதை தடுப்பதற்குரிய வழி வகைகளைப் பற்றியும் ஆட்சியாளர்களுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்தியிருந்தோம்.

ஏழாவது ஆண்டை பூர்த்தி செய்த மொட்டுக்கட்சி: பசில் தலைமையில் ஏற்பாடுகள் தீவிரம்

ஏழாவது ஆண்டை பூர்த்தி செய்த மொட்டுக்கட்சி: பசில் தலைமையில் ஏற்பாடுகள் தீவிரம்

இருப்பினும் இதுவரை எந்தவிதமான சாதகமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் உரிய தரப்பினால் மேற்கொள்ளப்படாத நிலையில் நாம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு (புதிய இணைப்பு) | North Province Hospital Straike

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று முதல் மாகாண ரீதியாக அடையாள வேலை நிறுத்த தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. 

 வடமராட்சி பருத்தித்துறை

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையிலும் இன்றைய தினம் அரச மருத்துவர்களின் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற்றுவருகிறது.

அரசாங்கமானது தமது முன்மொழிவுகளின் ஊடாக தற்சமயம் மேற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் முன்வர வேண்டும்.

அவ்வாறு தீர்வை வழங்கி வைத்தியர்களை நாட்டில் தக்கவைத்து, இலவச சுகாதார சேவையை பேணுவதற்கு தவறும் பட்சத்தில் போராட்டம் தீவிர படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு (புதிய இணைப்பு) | North Province Hospital Straike

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு (புதிய இணைப்பு) | North Province Hospital Straike

முல்லைத்தீவு

அதேவேளை, முல்லைத்தீவிலும் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக  எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.




GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026