தமிழர்களின் தாயகத்தில் சீனா..! போர்க்கொடி தூக்கி எதிர்ப்பு!

Jaffna Sri Lanka China Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Nov 03, 2023 07:09 AM GMT
Report

இலங்கைக்கான சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அக் குழுவினருக்கு எதிராக வடக்கில் வலுவான எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும்(6)ஆம் திகதி இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் வருகை தரவுள்ளனர்.

தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் வல்லாதிக்கப் போட்டியின் காரணமாக இந்தியாவின் தலையீடுகளைக் குறைக்கும் நோக்கில் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது எனக் குற்றம் சாட்டப்படுகின்றது.

தமிழர் பகுதியில் அடாத்தாக குடியேறும் புத்தர்: கிழக்கில் ஆக்கிரமிக்கப்படும் தமிழ் முஸ்லிம் காணிகள்

தமிழர் பகுதியில் அடாத்தாக குடியேறும் புத்தர்: கிழக்கில் ஆக்கிரமிக்கப்படும் தமிழ் முஸ்லிம் காணிகள்

சீனாவின் ஆதிக்கம்

இதனைதொடர்ந்து, வடக்கு மீன்பிடித்துறையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றமை பலத்த கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

தமிழர்களின் தாயகத்தில் சீனா..! போர்க்கொடி தூக்கி எதிர்ப்பு! | Chinese Ambassador To Sri Lanka Kee Senhong

தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வடக்கு - கிழக்கு பகுதிகளில் சீனா வலிந்து ஆதிக்கம் செலுத்த முனைவது தமிழர்களில் வாழ்வாதாரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகும் என்று கடற்றொழிலாளர் சங்கங்கள் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டி வருகின்றது.

மேலும், சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் வருகையின் போது தமது எதிர்ப்பை வெளிப்படுத்த ஆயத்தங்கள் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், சீனத் தூதுவரின் யாழ்.விஜயத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் எதிர்ப்பதற்குத் தயாராகி வருகிறார்கள் என அறியக் கிடைத்தது.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு (புதிய இணைப்பு)

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு (புதிய இணைப்பு)

பிரச்சினைக்கான தீர்வு

சீனத் தூதுவர் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 30 பேருக்கு மாதாந்தம் ரூபா 6500 படி வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், சீனத் தூதுவரின் யாழ்ப்பாணம் விஜயத்துக்கான நிகழ்ச்சி நிரலில் யாழ்.பல்கலைக்கழக விஜயம் தவிர்க்கப்பட்டுள்ளதன் மூலம் இதுவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழர்களின் தாயகத்தில் சீனா..! போர்க்கொடி தூக்கி எதிர்ப்பு! | Chinese Ambassador To Sri Lanka Kee Senhong

இதேநேரம், தமிழ்த் தேசியம் சார்ந்து செயற்படுகின்ற கட்சிகளும், சீனாவில் வல்வளைப்பு முயற்சிகள் மீதான தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சீன தூதுவரின் யாழ் விஜயத்தை விரும்பவில்லை.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான க.சுகாசும் பூகோள ரீதியாக ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை இந்தியாவும் வெளிநாடுகளும் தலையிட்டு விரைவாக வழங்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கின்றனர்.

இதனால் கட்சிகளின் ஆதரவாளர்களும் சீனத் தூதுவரின் யாழ்ப்பாண விஜயத்தன்று போர்கொடி தூக்கி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்