இராணுவ மயமாகும் சிறிலங்கா - போர்க்கால அடிப்படையில் சுற்றுக்காவல் (Photos)
சிறிலங்காவில் இராணுவச்சட்டம் நடைமுறைப்படுத்தக்கூடும் என்ற அச்ச நிலையை மனிதஉரிமை ஆர்வலர்கள் முன்வைத்துள்ள நிலையில், அந்தச் அச்சத்தை ஆதாரப்படுத்தும் வகையில் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் பல கவச வாகனங்கள் நேற்று சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
சிறிலங்காவில் தற்போது நிலவும் அரசியல் வெற்றிடமானது இராணுவ சட்டத்தை பிரயோகிக்க வழி வகுக்கும் என்ற அச்சத்தின் மத்தியில் நாடளாவிய ரீதியில் மீண்டும் பரவலாக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் ,போர்க்கால அடிப்படையில் கவசவாகனங்கள் அதிகமாக களமிறக்கப்பட்டுள்ளமை அச்சங்களை தோற்றுவித்துள்ளது.
இந்த நிலையில் நாட்டில் மீண்டும் இராணுவ களமிறக்கப்பட்டுள்ளமை குறித்து மேற்குலநாடுகளும் மனிதஉரிமை அமைப்புக்களும் கவலை தெரிவித்துள்ளன.
நாடளாவிய ரீதியில் மீண்டும் இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளமை குறித்த அச்சத்தை வெளியிட்டுள்ள அமெரிக்கா “அமைதியான போராட்டக்காரர்களை சிறிலங்கா இராணுவம் ஒருபோதும் அச்சுறுத்தக்கூடாதென” அறிவுறுத்தியுள்ளது.
இராஜாங்க திணைக்களத்தின் சார்பாக இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ள ஊடகப்பேச்சாளர் Ned Price நெட் பிரைஸ் சிறிலங்காவின் நிலவரங்களை அமெரிக்கா அவதானித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.











ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
