நீதிபதியின் மெய்க்காப்பாளர் மீது தாக்குதல்
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Magistrate Court
By Sumithiran
கண்டி சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கேகாலையில் வைத்து தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேகாலை குருநாகல் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் நேற்று மாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடமை முடிந்து சென்றவேளை தாக்குதல்
இந்த காவல்துறை உத்தியோகத்தர் கடமையை முடித்த பின்னர் தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது முச்சக்கர வண்டியில் வந்த குண்டர்கள் குழுவினால் தாக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கேகாலை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் திருவிழா

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி