இலங்கையில் அதிகரித்துள்ள கொவிட் தொற்று - வெளிவந்தது புதிய தகவல்
srilanka
corona
increase
Dr. Anwar Hamdani
By Sumithiran
இலங்கையில் கொவிட் தொற்றினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர், கொவிட் ஒருங்கிணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி(Dr. Anwar Hamdani) தெரிவித்தார்.
இதேவேளை, வைத்தியசாலைகளில் ஒக்சிஜன் தேவைப்படுகின்ற நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 8 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், மக்கள் சுகாதார விதிகளை கடைப்பிடிப்பதும், முன்னெப்போதையும் விட கவனமாக இருப்பதும் அவசியம் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
