யாழ் சிறைச்சாலையில் திடீரென உயிரிழந்த கைதி
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
Jaffna Teaching Hospital
By Shalini Balachandran
யாழ் (Jaffna) சிறைச்சாலையில் கைதி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக யாழ். காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த குறித்த நபர் கொழும்பு (Colombo) 12 இல் வசிக்கும் 44 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
சிறைக்கைதி சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக சிறைச்சாலை காவலர்களுக்கு பல தடவைகள் அறிவித்ததாகவும், பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 22 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
5 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்