நாடளாவிய ரீதியில் மீண்டும் ஒரு பாரிய தொழிற்சங்கப் போராட்டம்?
ஏழு கோரிக்கைகளை முன்வைத்து நாட்டின் அனைத்து மருத்துவமனைகளின் தாதிய ஊழியர்கள் இந்த வாரம் மீண்டும் ஒரு பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்க முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
அந்த கோரிக்கைகளில், 2015 ஆம் ஆண்டில் தாதிய சேவைக்கு உறுதியளிக்கப்பட்ட ரூ .15,000 விபத்து கொடுப்பனவில் ஒப்புக் கொள்ளப்பட்ட ரூ. 5,000 உடனடியாக செலுத்துதல் மற்றும் தாதியர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் கொவிட் தடுப்பூசி வழங்குதல் ஆகியவை அடங்கும்.
இதுபோன்ற பல கோரிக்கைகளின் அடிப்படையில், மே 31 அன்று ஒரு நாள் சுகவீன விடுப்பு போராட்டத்தில் தாதியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இதையடுத்து, கடந்த மாதம் 1 ஆம் திகதி சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், 14 நாட்களுக்குள் பிரச்சினைகளை தீர்ப்பதாக உறுதியளிக்கப்பட்டது.
எனினும், இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்று அனைத்து இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பி.திசநாயக்க மெடிவட்ட தெரிவித்தார்.