சிறிலங்கா இராணுவத்தளபதிக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
காலாட்படை பிரிகேடியர் சந்தன ரணவீரவை மேஜர் ஜெனரல் தரத்திற்கு உயர்த்துவதற்கான பரிந்துரைகளை அதிபர் ரணிலிடம் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (24) இராணுவத் தளபதிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் மனுதாரர் பிரிகேடியருக்கு நிலுவைத் தொகை மற்றும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிரிகேடியர் சந்தன ரணவீர தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொராயஸ் ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.
பதவி உயர்வுக்கு பரிந்துரைக்குமாறு
மேஜர் ஜெனரல் பதவிக்கு பதவி உயர்வு பெறுவதற்கான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்த போதிலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அந்த பதவிக்கு பதவி உயர்வுக்காக அதிபரிடம் பரிந்துரை செய்வதை தடுக்கும் வகையில் இராணுவத் தளபதி செயற்பட்டு வருவதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளபதியின் தீர்மானத்தை இரத்துச் செய்து பதவி உயர்வுக்கு பரிந்துரைக்குமாறு கோரி மனுதாரர் பிரிகேடியர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |