மீண்டும் திறக்கப்படவுள்ள ஹோர்முஸ் நீரிணை: ஈரான், ஓமான் பேச்சுவார்த்தை
ஹோர்முஸ் நீரிணையையும் அப்பகுதியில் உள்ள தங்களது கடற்பரப்புகளையும் மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிராந்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விவகாரம் சாதகமான திசையில் சென்றாலும், ஒப்பந்தம் எட்ட இராஜதந்திர முயற்சிகளுக்கு மேலும் கால அவகாசம் தேவை என வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
பேச்சுவார்த்தைக்காக ஓமான் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஈரான் சென்றதாகவும், இந்த இராஜதந்திர முயற்சி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீதான அமெரிக்க குண்டுவீச்சை நிறுத்திய முடிவுடன் ஒத்துப்போனதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறக்கப்படவுள்ள ஹோர்முஸ் நீரிணை

அமெரிக்க மத்திய படைத் தளபதி தலைமையகம் தொடர்ச்சியாக 13 இரவுகளாக இந்த தாக்குதலை நடத்தி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனினும் வெள்ளை மாளிகையும் சென்ட்கம்மும் கருத்து கோரியதற்கு பதிலளிக்கவில்லை எனவும் அது மேலும் தெறிவிக்கப்படுகிறது.
ஓமான்-ஈரான் பேச்சுவார்த்தையை வாஷிங்டன் உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம் மேலும் தெரிவித்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |