ரணில் மீது மற்றுமொரு குற்றச்சாட்டு : மக்கள் நிதியில் முறைகேடு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 29 ஒருங்கிணைப்பு செயலாளர்களை நியமித்து, அவர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவுகள், சம்பளம், ஏனைய அனைத்து வசதிகள் மற்றும் வாகன வசதிகளையும் வழங்கியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வெளிப்படுத்தியுள்ளார்.
வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான இன்றைய (15.11.2025) விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் உரையாற்றிய அவர், 'எங்கள் ஜனாதிபதி ஐந்து ஆலோசகர்களை மட்டுமே நியமித்துள்ளார்.
அநுரவின் செயற்பாடு
அவர்கள் அனைவரும் தன்னார்வத்துடன் பணியாற்றுகிறார்கள். அப்படித்தான் அவர் சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்.

ஜனாதிபதியின் செலவுகளிலிருந்து அனைத்து தேவையற்ற செலவுகளும் குறைக்கப்பட்டுள்ளன.
39 பேருக்கு பதிலாக, 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தன்னார்வத்துடன் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக இதைச் சொல்ல விரும்புகிறேன்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு இருந்த 29 ஒருங்கிணைப்பு செயலாளர்களுக்கும் மில்லியன் கணக்கான ரூபாய் செலவிடப்பட்டது” என தெரிவித்துள்ளார்.
குண்டு வெடிப்புக்களால் அதிரும் இந்தியா...! காவல் நிலையத்தில் வெடித்து சிதறிய வெடிபொருட்கள்: 7 பேர் பலி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |