மயக்க மருந்து இல்லை, டோர்ச்லைற்றில் பிரசவம் : காசாவில் கர்ப்பிணித்தாய்மாரின் அவலநிலை
Pregnancy
Israel-Hamas War
Gaza
By Sumithiran
காசாவில் இடம்பெறும் கொடிய போர்ச் சூழலுக்கு மத்தியில் பிரசவிக்கும் தாய்மார்கள் மயக்க மருந்து எதுவுமின்றி சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் நேற்று (நவ.1) மிகவும் கவலையளிக்கும் செய்தியை வெளியிட்டன.
மேலும், இதுபோன்ற அறுவை சிகிச்சைக்குப் பிறகு வலி நிவாரணி மருந்து கூட அவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
டோர்ச் லைட் மூலம் பிரசவம்
மின்சாரம் இல்லாத இடங்களில் டோர்ச் லைட் மூலம் பிரசவம் நடப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காஸாவில் தற்போது 50,000 கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளனர். முறையான மருந்து, உணவு, குடிநீர் கிடைக்காததால், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின்படி, காஸாவில் ஒவ்வொரு நாளும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 160 ஆகும்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்