தலைவர் பிரபாகரனை பிடிக்கும்..! நானும் அவருக்கு பின்னால் நின்றவன் - மனம் திறக்கும் அங்கஜன்
தமிழ் தேசியத்தை வாழ வைப்பதில் தானும் பெரும் பங்கு ஆற்றுவதாக கூறுகிறார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்.
எமது ஊடகத்தின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்துக்களை பகிர்ந்த போது மேற்கண்டவாறு கூறிய அவர், 2009 இல் யுத்தம் மௌனிக்கப்படும் வரை ஒட்டுமொத்த தமிழர்களும் யாருக்கு பின்னால் நின்றார்களோ நானும் அவருக்கு பின்னால் தான் நின்றேன் எனத் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றிய நிலைப்பாடு, தமிழ் தேசியத்தை வாழ வைப்பதில் அங்கஜனின் வகிபாகம் எவ்வாறாக இருக்கிறது?
சிறிலங்காவின் சமகால அரசியல் நிலவரம் பூதாகரமான பிரச்சினைகளால் நிரம்பிப்போயிருக்கூடிய ஒரு சூழலில், தமிழ் தேசிய அரசியல் பரப்புக்கு அப்பால் சிறிலங்காவின் சிங்கள தேசியவாதக் கட்களில் அங்கம் வகிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு இது விடயங்களில் என்னவாக இருக்கிறது.?
திட்டமிட்டமிட்ட சிங்கள ஆக்கிரமிப்புகள் மலிந்துபோன இந்த நாட்களில் தாம் சார்ந்திருக்ககூடிய கட்சியின் நிலைப்பாடு எப்படியிருக்கிறது? இப்படியாக பல வினாக்களுக்கான விடையினை பகிர்ந்துகொள்கிறார் அங்கஜன் இராமநாதன்.
