இலங்கை தொடர்பில் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு
Colombo
Government Of India
By Sumithiran
இலங்கைக்கான 400 மில்லியன் டொலர் கடன் நாணயப்பரிமாற்ற கால எல்லை இந்திய மத்திய வங்கியினால் நீடிக்கப்பட்டுள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு இந்தியா வழங்கும் பன்முகப்படுத்தப்பட்டதும் தாராளமானதுமான ஆதரவு தொடர்வதாகவும் உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இந்தியா, இலங்கைக்கு கடனுதவி மூலம் இலங்கையின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்து வருவதும் அரிசியை கூட வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டிய பங்களாதேஷ் நாட்டுக்குரிய கடன்தொகையை அந்நாடு நீடித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அறிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி