எரிபொருள் கையிருப்பு - இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்ட அறிவிப்பு
Ceylon Petroleum Corporation
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்ட அறிவிப்பு
நேற்று (22) நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 4000 மெட்ரிக் தொன் டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 3000 மெட்ரிக் தொன் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தது.
கிடைத்துள்ள சிறந்த வரவேற்பு
இதேவேளை, வாகன இலக்கத்திற்கு ஏற்ப எரிபொருள் வழங்கும் திட்டத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாக அகில இலங்கை பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருளுக்கான வரிசைகளும் குறைந்து வருவதாக சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஸ தெரிவித்தார்.
இதனிடையே, எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக இலங்கை பெட்ரோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் சாந்த சில்வா குறிப்பிட்டார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்