அமெரிக்காவை உலுக்கிய வெடி விபத்து
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் நிலையத்தில் (அகாடமி) வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பிஸ்கைலுஸ் மைய அகாடமி பயிற்சி நிலையத்திலுயே இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாண்டி தெரிவித்துள்ளார்.
விபத்திற்கான காரணம்
வெடி விபத்திற்கான காரணம் தெரியவில்லை எனவும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து, அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர்.
வெடிகுண்டு தொழில்நுட்ப வல்லுநர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் லாரா எமில்லர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என கவர்னர் கவின் நியூசம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
