அயல் நாடுகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் : ஈரானிடம் ஹமாஸ் கோரிக்கை
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் ஹமாஸ் அமைப்பு ஈரானிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்குமாறு ஈரானைக் கேட்டுக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு பதிலடி கொடுக்கும் உரிமை ஈரானுக்கு உண்டு என்பதை அங்கீகரிப்பதாகத் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஈரான் எண்ணெய் வளங்கள் மீதான தாக்குதல்
இது தொடர்பாக ஹமாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "அமெரிக்க - இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளைத் தடுக்க பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும். அண்டை நாடுகளுக்கு இடையிலான சகோதரத்துவ உறவுகளைப் பாதுகாப்பது அவசியமானது," எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் தனது எண்ணெய் வளங்கள் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் பிராந்திய நாடுகளின் வலுசக்தி நிலையங்களைத் தாக்குவோம் என எச்சரித்திருந்த பின்னணியில் ஹமாஸின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணித்து, சகோதரத்துவத்தைப் பேணுமாறு ஹமாஸ் இதன்போது வலியுறுத்தி வருவதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |