எண்ணெய் தட்டுப்பாட்டை குறைக்க ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு...! விலைகள் குறையும் வாய்ப்பு
அமெரிக்காவின் மூலோபாய எண்ணெய் கையிருப்பிலிருந்து முதற்கட்ட விநியோகங்கள் அடுத்த வாரம் முதல் சந்தைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அமெரிக்க வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சர்வதேச வலுசக்தி
இதனடிப்படையில், சர்வதேச வலுசக்தி முகாமையின் (IEA) ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் 400 மில்லியன் கொள்கலன் எண்ணெயை விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் ஒரு பகுதியாக, 172 மில்லியன் கொள்கலன் மசகு எண்ணெயைச் சந்தைக்கு விடுவிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த நான்கு மாத காலப்பகுதியில் இந்த எண்ணெய் கையிருப்பு படிப்படியாக விடுவிக்கப்படவுள்ளது.
இதற்கு முன்னர், 2022ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பைத் தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி ஜோ பைடனினால் இவ்வாறானதொரு பாரிய எண்ணெய் விடுவிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |