அஹமதாபாத் விமான விபத்துக்கு நினைவேந்தல் அறக்கட்டளை ஆரம்பம்!
அஹமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக அறக்கட்டளை ஒன்றை டாடா நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் உட்பட 275 பேர் உயிரிழந்தனர்.
விமான விபத்து குறித்த முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகி உள்ள நிலையில், அதற்கு விமானிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா
இந்தநிலையில், இந்தவிபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஏர் இந்தியாவை நிர்வகிக்கும் டாடா நிறுவனம் புதிய அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இதற்கு “The Al-171 Memorial and Welfare Trust” என பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அறக்கட்டளையானது விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அவர்களை சார்ந்துள்ளவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறக்கட்டளை
விபத்துக்கு பிறகு உதவி மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள், மருத்துவ மற்றும் பேரிடர் நிவாரண வல்லுநர்கள், சமூக பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் உதவி செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக டாடா நிறுவனம் மற்றும் டாடா அறக்கட்டளை தலா ரூபாய் 250 கோடி என மொத்தம் ரூபாய 500 கோடி பங்களிப்பு அளித்துள்ளன.
இந்த அறக்கட்டளையை ஐந்து உறுப்பினர்கள் கொண்ட வாரியம் நிர்வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக பத்மநாபன் மற்றும் சித்தார்த் சர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் விரைவில் மற்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
