பாடசாலை மாணவிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “18 வயதுக்குட்பட்ட மாணவிகளின் கர்ப்பங்கள், அவர்களைப் பாதிக்கப்பட்டவர்களாக மாற்றுவதுடன் பல்வேறு சிக்கல்களை உருவாக்குகின்றன.
பெற்றோரின் கவனிப்பு
இதனால், பெற்றோரின் கவனிப்பு இல்லாமல் எதிர்காலத்தில் சமூகத்தில் கைவிடப்பட்ட அல்லது அனாதையாக்கப்பட்ட குழந்தைகளின் பிறப்பு ஏற்படுகின்றது.
இதைத் தடுக்க அரசாங்கமாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம், கல்வி அமைச்சுடன் இணைந்து இளம் பருவப் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்த தெளிவான புரிதலை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, அதற்கான முழுப் பொறுப்பு ஒரு பெண்ணின் மீது மட்டும் விழுவதில்லை.
குற்றவியல் கொலை
அனாதையாகவோ அல்லது கைவிடப்பட்டவர்களாகவோ சமூகத்தில் விடப்படும் குழந்தைகள், சமூக களங்கத்தையும், பாவத்தையும் மற்றும் சாபத்தையும் சுமக்க நேரிடுகிறது.
எனவே, உறவு வைத்திருக்கலாம் ஆனால் பொறுப்பான குடும்ப உறவு இல்லாமல் குழந்தை பெறுவது சாத்தியமில்லை என்றால், கர்ப்பத்தைத் தடுக்க அறிவியல் முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
கரு உருவான பிறகு அதை அழிப்பது குற்றவியல் கொலையாகும் ஆகவே, குழந்தைகளை அனாதைகளாகவோ அல்லது சமூகத்தால் கைவிடப்பட்டவர்களாகவோ ஆக்காமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
