இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு
அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினையை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான தீர்வைப் பெறும்வரை தமது போராட்டம் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்(Joseph Stalin) (06) தெரிவித்தார்.
உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நேற்று (06) ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய போராட்ட பிரசாரம் வெற்றி பெற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த போராட்டத்தில் 30 தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும், தீவு முழுவதும் கல்வி பிரிவு அலுவலகங்கள் உள்ள நகரங்களை மையமாகக் கொண்டு போராட்டம் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஆசிரியர்-அதிபர் சம்பள பிரச்சினையை நான்கு வழிகளில் தீர்க்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும், அதை முதல் கட்டத்தில் தீர்க்க அரசுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் ஆசிரியர் மற்றும் அதிபரிகளின் உதவியின்றி ஒக்டோபர் 21 ஆம் திகதி பாடசாலைகளைத் தொடங்க கல்வி அமைச்சு முடிவெடுத்துள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
