நான்கு மணிநேரத்திற்கு முன் வாருங்கள் - கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியான அறிவிப்பு
pcr test
bandaranayake airport
united arab emirates
By Sumithiran
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு(UAE) தொழிலுக்காகச் செல்லும் இலங்கையர்களுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விரைவான பிசிஆர் சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தொழிலுக்காக செல்பவர்கள் தாம் புறப்படும் நேரத்துக்கு 04 மணிநேரத்துக்கு முன்னர் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தமது நாட்டிற்கு வரும் அனைத்து தனி நபர்களும் கொரோனாவுக்கு எதிர்மறையாக சோதனை செய்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்தும் அறிக்கை இருக்க வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்ததை அடுத்தே, மேற்படி நடவடிக்கையானது எடுக்கப்பட்டதாக சிவில் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி