அதிகரித்துள்ள உப்பு விலை : யாழ்ப்பாண மக்களுக்கு வெளியான அறிவிப்பு
Jaffna
Mannar
By Sumithiran
வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன், உப்பு விநியோகம் குறித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
உப்பின் (salt)விலை கட்டுப்பாடற்ற ரீதியில் அதிகரித்துள்ள நிலையில், அச்சுவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமானது மன்னாரில் (mannar)உப்பைக் கொள்வனவு செய்து யாழ்ப்பாண (jaffna)மாவட்டத்திலுள்ள அனைத்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் விநியோகித்துள்ளது.
உப்பை கொள்வனவு செய்ய முடியும்
179 ரூபாவுக்கு ஒரு பக்கெட் உப்பை பொதுமக்கள் இன்று சனிக்கிழமை (10.05.2025) முதல் கொள்வனவு செய்ய முடியும். பொதுமகன் ஒருவர் ஆகக் கூடியது 3 உப்பு பக்கெட்களையே கொள்வனவு செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்