வடக்குக்கு விஜயம் செய்தார் சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ்
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த கைலாசநந்த் சுவாமி ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் தலைமையிலான குழுவின ர்பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இன்றைய தினம் (24) காலை விசேட உலங்குவானூர்தி மூலம் மன்னாரிற்கு வருகை தந்த நிலையில் குறித்த விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
கைலாசநந்த்கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு கருணானந்த குருக்கள் மற்றும் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினரையும் சந்தித்து கலந்துரையாடி உள்ளனர்.
பின்னர் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டதோடு,ஆலயத்தையும் சுற்றி குறித்த குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.
செய்தி - நயன்
ஆன்மீக மற்றும் கலாசார உறவு
மேலும், இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஆன்மீக மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள 'சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ், இன்று மதியம் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

உலங்குவானூர்தி மூலம் பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் மற்றும் அவரது சிறப்புத் தூதுக்குழுவினர், அங்கிருந்து யாழ்ப்பாணம் நகரிலுள்ள தனியார் விடுதிக்குச் சென்றனர்.
அங்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பளித்தனர்.
இதன்போது, சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ்ஜுக்கு பொன்னாடை போர்த்தி ஆளுநர், வடக்கு மாகாண சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தால் விசேடமாக வெளியிடப்பட்ட 'சிவன் யாத்திரைப் பாதை' மற்றும் 'இராமாயண யாத்திரைப் பாதை' ஆகிய நூல்களையும் வழங்கி வைத்தார்” என்றார்.
செய்தி - கஜி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







