கோட்டாபய அமைச்சின் ஆளுநரின் கட்டடத்தை இடிக்க உத்தரவு
வடமத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மஹிபால ஹேரத் தனது அதிகாரங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, பெரமியன்குளம வனப்பகுதி அமைத்துள்ள ஹோட்டல் மற்றும் 60 பேர்ச்சர்ஸ் காணியில் அமைத்துள்ள கட்டடம் என்பவற்றை ஒரு மாதத்திற்குள் அகற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஹோட்டல் மற்றும் கட்டடம் என்பவை மஹிபால ஹேரத் தனது மனைவியின் பெயரில் அமைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
முன்னாள் ஆளுநரின் மனைவி அஜந்தா ரெபசரி ஹேரத்துக்கு கடிதம் ஊடாக நுவரகம் பலாத்த பிரதேச செயலாளர் சுதர்ஷன திசாநாயக்க இதனை அறிவித்துள்ளார்.
எல்லை நிர்ணயம்
அரசாங்க கொள்கை முடிவாக, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியின் எல்லை நிர்ணயத்தை நீர்ப்பாசனத் திணைக்களம் தற்போது தொடங்கியுள்ளது.

அதன்படி, பெரமியன்குளம வனப்பகுதியை எல்லை நிர்ணயம் செய்யும் போது, எந்தவொரு சட்ட ஆவணங்களும் இல்லாமல் வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக ஹோட்டல் கட்டப்பட்டமை கண்டறியப்பட்ட நிலையில், அதை இடிக்குமாறு முன்னாள் ஆளுநரின் மனைவிக்கு அறிவிக்கப்பட்டதாக சுதர்ஷன திசாநாயக்க கூறினார்.
தற்போது, பெரமியன்குளம் வனப்பகுதியில் அனைத்து அளவீட்டுப் பணிகளும் நிறைவடைந்துள்ளதுடன் எல்லைக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 17 மணி நேரம் முன்