கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நல்லூர்க் கந்தனின் வருடாந்த மகோற்சவம் (நேரலை)
Jaffna
Nallur Kandaswamy Kovil
Festival
By Sathangani
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
இன்றிலிருந்து தொடர்ந்து 25 நாட்கள் இம் மகோற்சவம் இடம்பெறவுள்ளது.
இதற்கமைய நல்லூர் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு நேற்று (20) முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டு செப்டெம்பர் 16 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே வீதிகள் திறந்து விடப்படும் என யாழ் மாநகர சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, நல்லூர் ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித் தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியைத் தவிர எந்த வாகனமும் உட்செல்ல முடியாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.














ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்
எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !
2 வாரங்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி