தொடர் துப்பாக்கிச் சூடுகள் - இலக்கு வைக்கப்படும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய புள்ளி
நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் தொடர் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தையும் மற்றும் அரசின் மீதான அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித பாதிப்பும் இல்லையென தனது தரப்பு கருத்தை வெளியிட்டிருந்தது.
இவ்வாறான பின்னணியில், நாட்டில் நடைபெறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நிலைகுலைய செய்வதற்காக திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரட்ன தெரிவித்திருந்தார்.
இதனடிப்படையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய யாரோ ஒரு முக்கிய புள்ளி பாதாள உலக கும்பலினால் இலக்கு வைக்கப்படுகின்றாரா எனவும் கேள்விகள் எழுப்பப்படுகின்றது.
அத்தோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கொலை செய்வதற்காக அரசினால் இந்த நடவடிக்கைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஒருதரப்பு தெரிவிக்கப்படுகின்றன.
இந்தநிலையில், கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் பின்னணி, தொடர் துப்பாக்கி சூட்டு சம்பவங்களுக்கான காரணம், அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை மற்றும் பின்னணியில் செயற்படும் முக்கிய புள்ளிகள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்