கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: கம்பஹாவில் அதிரடி சுற்றிவளைப்பு - ஒருவர் கைது

Sri Lanka Police Sri Lanka Police Investigation Law and Order Ganemulle sanjeewa Arrest
By Shalini Balachandran May 14, 2026 06:14 AM GMT
Report
 🛑 புதிய இணைப்பு 

கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடை சந்தேக நபர் என இன்று கைது செய்யப்பட்ட கம்பஹா உஸ்மான்ட் என்பவரை  72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய காவல்துறை அனுமதி பெற்றுள்ளது.

குறித்த விடயத்தை காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்ததாகவும் கொலையைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

🛑 முதலாம் இணைப்பு 

பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், நேற்று (13-05-2026) இரவு கம்பஹா, ஸ்ரீ போதி வீதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

சஞ்சீவ குமார சமரரத்ன, என்றழைக்கப்படும் கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்ததாகவும் கொலையைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை வழங்கியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் உஸ்மான்ட் குணசேகரா, என்றழைக்கப்படும் கம்பஹா உஸ்மான்ட் கொழும்பு குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழிலிருந்து சென்ற இளம் யுவதியை காணவில்லை - பெற்றோர் முறைப்பாடு

யாழிலிருந்து சென்ற இளம் யுவதியை காணவில்லை - பெற்றோர் முறைப்பாடு

தடுப்புக் காவல் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி, கொழும்பு இலக்கம் 05 நீதவான் நீதிமன்ற வளாகத்தில் சிறைச்சாலையிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்த கனேமுல்ல சஞ்சீவ மீது சட்டத்தரணியாக நடித்த ஒருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாகத் தற்போது தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: கம்பஹாவில் அதிரடி சுற்றிவளைப்பு - ஒருவர் கைது | Another Arrested In Ganemulla Sanjeewa Murder

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், திட்டமிட்ட குற்றச்செயல் குழுக்களுடன் தொடர்புடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிற சந்தேகநபர்கள் மற்றும் பின்னணி தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புளோரிடா கடலில் விழுந்த விமானம் : பாதுகாப்பாக மீட்கப்பட்ட பயணிகள்

புளோரிடா கடலில் விழுந்த விமானம் : பாதுகாப்பாக மீட்கப்பட்ட பயணிகள்

வெள்ளத்தில் மூழ்கும் வீதிகள் - தெற்கு அதிவேக வீதி சாரதிகளுக்கான அறிவிப்பு

வெள்ளத்தில் மூழ்கும் வீதிகள் - தெற்கு அதிவேக வீதி சாரதிகளுக்கான அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020